/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அம்பேத்கர் சிலை அமைக்கும் விவகாரம்; வி.சி., அறிவிப்பிற்கு அ.தி.மு.க., கண்டனம்
/
அம்பேத்கர் சிலை அமைக்கும் விவகாரம்; வி.சி., அறிவிப்பிற்கு அ.தி.மு.க., கண்டனம்
அம்பேத்கர் சிலை அமைக்கும் விவகாரம்; வி.சி., அறிவிப்பிற்கு அ.தி.மு.க., கண்டனம்
அம்பேத்கர் சிலை அமைக்கும் விவகாரம்; வி.சி., அறிவிப்பிற்கு அ.தி.மு.க., கண்டனம்
ADDED : நவ 16, 2025 11:58 PM

கள்ளக்குறிச்சி: வி.சி., கட்சியின் ஆர்ப்பாட்டம் அறிவிப்பிற்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ., எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில் உள்ள அம்பேத்கர் சிலையை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தி.மு.க.,வினர் தனிப்பட்ட முறையில் புதிதாக சிலை வைக்க முயற்சி செய்கின்றனர். அ.தி.மு.க.,வுடன், அனைத்து கட்சியினரையும் இணை த்து அம்பேத்கர் சிலை வைப்பதற்கு எங் கள் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
ஆ னால் அ.தி.மு.க., நகர செயலாளர் பாபு மற்றும் தொகுதி எம்.எல்.ஏ.,வான நானும் சேர்ந்து கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தி.மு.க.,வினரின் துாண்டுதல் பேரில், வி.சி., கட்சியினர், ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். இது மட்டமான அரசியல் ஆகும். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
இதுகுறித்து கலெக்டர் மற்றும் எஸ்.பி.,யிடம் பேசி உள்ளோம்.
அம்பேத்கர் சிலை வைக்க நாங்கள் எப் போதும் எதிர்க்கவில்லை. மாறாக தி.மு.க.,வினர் சார்பில் சிலை வைக்கப்பட்டால், அ.தி.மு.க., சார்பில் சிலையின் அடிபீடத்தை நாங்கள் வைக்கிறோம். சிலைக்கான சுற்றுச்சுவரை சிலை வைப்புக் குழுவினர் வைக்கட்டும் .
புதிதாக வைக்கப்படும் சிலையில் புதிதாக யார் பெயரையும் சேர்க்க கூடாது. ஏற்கனவே உள்ள பெயர்களை மட்டும்தான் வைக்க வேண்டும். இதனை மீறினால் நாங்கள் அதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வோம் என செந்தில்குமார் தெரிவித்தார்.

