/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நலம் காக்கும் சிறப்பு முகாம்
/
நலம் காக்கும் சிறப்பு முகாம்
ADDED : நவ 16, 2025 11:57 PM

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமினை மாவட்ட மருத்துவ அலுவலர் துவக்கி வைத்தார்.
மணலுார்பேட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. மணலுார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் பொது மருத்துவம், இதயம், எலும்பு, நரம்பியியல், மகப்பேறு, குழந்தைகள் மருத்துவம், நுரையீரல், அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை உள்ளிட்ட 17 சிறப்பு பிரிவுகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ரேவதிஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் சிவா வரவேற்றார். மாவட்ட மருத்துவ அலுவலர் ராஜா முகாமினை துவக்கி வைத்தார்.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
ஒன்றிய செயலாளர் பாரதிதாசன், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜீவ் காந்தி முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அம்முரவிச்சந்திரன், நகர துணை செயலாளர் சரவணன், பேரூராட்சி துணைத் தலைவர் தம்பிதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.

