/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் சுந்தர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
/
திருக்கோவிலுார் சுந்தர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் சுந்தர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் சுந்தர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 16, 2025 11:56 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என். ஜி.ஜி.ஓ., நகர் சுந்தர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகரில் உள்ள திருக்கோவிலுார் திருவிக்ரம சுவாமி தேவஸ்தானத்தை சேர்ந்த பழமையான சுந்தர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
இது புனரமைக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை 5:00 மணிக்கு புண்ணியாக வசனம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், மகாபூர்ணாகுதி, யாத்ராதானம், கலசம் புறப்பாடாகி 9:00 மணிக்கு பட்டாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஏஜென்ட் கோலாகலன் செய்திருந்தார். நகராட்சி சேர்மன் முருகன் முன்னிலை வகித்தார்.
தொழிலதிபர் டி.கே.டி.முரளி, தியாகராஜன், நகரமன்ற கவுன்சிலர் சம்பத், கோவிந்தன், நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, தொழிலதிபர்கள் சக்தி, கண்ணப்பன், கோதம்சந்த், முருகானந்தம், டி.கே.சரவணன், கிருஷ்ணன், உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

