/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய கலெக்டர் அலுவலக பணி ஆய்வு
/
புதிய கலெக்டர் அலுவலக பணி ஆய்வு
ADDED : நவ 28, 2025 05:27 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக இறுதிக் கட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகப் பயன்பாட்டிற்காக வீரசோழபுரத்தில் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில், ரூ.139.41 கோடி மதிப்பில், 35.18 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களுடன் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது.
புதிய கலெக்டர் அலுவலக கட்டடத்தின் இறுதிக் கட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சங்கராபுரம் சங்கராபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பதிவேற்றும் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.
உடன் தாசில்தார் வைரக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் திவ்யா உடனிருந்தனர்.

