/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடுத்த மாதத்திற்கான அரிசியை தற்போதே பெற்றுக்கொள்ளலாம்: கலெக்டர் அறிவிப்பு

ADDED : அக் 22, 2025 11:31 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்கான அரிசியை மட்டும் இந்த (அக்டோபர்) மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
மாவட்டத்தில் உள்ள 766 ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட் ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்கான அரிசியை மட்டும் நடப்பு மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் கல்வராயன்மலை பகுதியில் இயற்கை பேரிடரால் அதிகம் பாதிக்கக்கூடிய தொரடிப்பட்டு, கொடுந்துறை, சின்னகருவேலம்பாடி, வாரம், வஞ்சிக்குழி, மோட்டாம்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொது விநியோக திட்ட பொருட்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்தாலும், பொதுவிநியோக திட்ட பொருட்கள் தடையின்றி வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.