நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதி மற்றும் தோஷ நிவர்த்திக்காக, பங்குனி மாத அமாவாசையையொட்டி, நிகும்பலா யாகம் நடந்தது. அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக ஆராதனை, ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடந்தது.
தொடர்ந்து பத்ர காளி கவசம் பாடி, மிளகாய் கொண்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யாகம் நடத்தப்பட்டது.
சிறிதும் நெடியின்றி பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.