/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா
/
என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு விழா
ADDED : ஜன 17, 2025 06:49 AM

கள்ளக்குறிச்சி: இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்கள் சார்பிலான நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது. முகாமில் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தியாகதுருகம் அரசு பள்ளி உட்பட பல இடங்களில் துாய்மை பணி மற்றும் மருத்துவ முகாம், விழிப்புணர்வு பேரணி போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாம் நிறைவு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். விழாவில் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டது.
கல்லுாரி செயலாளர் கோவிந்தராஜு, துணை முதல்வர் ஜான்விக்டர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா, தேசிய மாணவர் படை பால்ராஜ், சமூக ஆர்வலர் சரண்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜா திட்ட செயலாக்கம் குறித்து பேசினார். விழாவில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் ேஹமலதா நன்றி கூறினார்.