ADDED : ஆக 21, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி இரண்டாம் நாளாக நேற்று பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை மகப்பேறு பிரிவில், பணிபுரியும் செவிலியர்கள் நேற்று காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் ரங்கநாயககி தலைமை தாங்கினார். இதில் அரசு மருத்துவமனைகளில் புதிய செவிலியர்கள் கொண்டு பணியிடங்களை உருவாக்காமல், ஏற்கனவே உள்ள செவிலியர்களை கொண்டு பணி நிரவல் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள் பங்கேற்றனர்.
