தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ‘டிட்டோ–ஜாக்’ ஆர்ப்பாட்டம்

‘டிட்டோ–ஜாக்’ ஆர்ப்பாட்டம்

‘டிட்டோ–ஜாக்’ ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 21, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரிஷிவந்தியம்: அரியலுார் வட்டார கல்வி அலுவலகம் முன் ‘டிட்டோ–ஜாக்’ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு ஆசிரியர் கூட்டணி அமைப்புகளைச் சேர்ந்த வட்டார தலைவர்கள் குரு அருள்ஜோன், ஜோசப் அந்தோணி, பெந்தகோஸ், செல்வம் தலைமை தாங்கினர். வட்டார மகளிரணி செயலாளர் இளமதி, பாமா சுப்பம்மாள் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகி அசோக்குமார், முன்னாள் மாநில நிர்வாகி ஏழுமலை உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிதி பற்றாக்குறையை சரிசெய்து கல்விக்கு முழு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும்.

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும்.

பி.எட்., ஊக்க ஊதிய தணிக்கை தடையை நீக்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட 20 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

திருக்கோவிலுார் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பில் திருக்கோவிலுார் வட்டாரக் கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி திருக்கோவிலுார் வட்டார தலைவர் ரவி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் குமார் தலைமை தாங்கினர். பொருளாளர்கள் முரளி, லட்சுமி நாராயணன், மகளிர் அணி செயலாளர் கவிதா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சாந்தி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us