/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி நீர் பிடிப்பு பகுதியில் அதிகாரி ஆய்வு
/
ஏரி நீர் பிடிப்பு பகுதியில் அதிகாரி ஆய்வு
ADDED : டிச 01, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆய்வு செய்தார்.
சங்கராபுரம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கல்வராயன்மலை பகுதியில் பெய்து வரும் கன மழையால் மணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கராபுரம் பகுதி ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.
சங்கராபுரம் அடுத்த பூட்டை, தியாகராஜபுரம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா நேற்று மாலை 5:00 மணியளவில் ஆய்வு செய்தார்.
தாசில்தார் சசிகலா, வருவாய் ஆய்வாளர் திவ்யா மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் உடனிருந்தனர்.