/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை குறித்து அதிகாரிகள் ஆய்வு
/
கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை குறித்து அதிகாரிகள் ஆய்வு
கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை குறித்து அதிகாரிகள் ஆய்வு
கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை குறித்து அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 18, 2024 07:51 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம், போதை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என அதிகாரிகள், போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி மற்றும் சேஷசமுத்திரம் பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 68 பேர் இறந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் குட்கா விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து நேற்று கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையர் குப்புசாமி தலைமையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., அறிவழகன் மேற்பார்வையில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
சந்தேகப்படும்படியான வீடுகள், கடைகளில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, கோமுகி ஆற்றங்கரையை ஒட்டியவாறு உள்ள இடுகாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக என ஆய்வு செய்தனர்.
மேலும், சாராயம் குடித்து இறந்தவர்களின் வாரிசுதாரர்களிடம் அரசின் உதவித்தொகை சரியாக வருகிறதா என கேட்டறிந்தனர்.
சாராயம், குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை நடந்தால், அது குறித்த தகவலை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின்போது, கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், கலால் ஆய்வாளர் குப்புசாமி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் இளையராஜா, கலால் இன்ஸ்பெக்டர் எழிலரசி உடனிருந்தனர்.