/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்பனை : ஒருவர் கைது
/
மதுபாட்டில் விற்பனை : ஒருவர் கைது
ADDED : ஜூன் 06, 2025 08:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில், கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதே ஊரைச்சேர்ந்த ராஜா, 40; தனது வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.