ADDED : ஜூன் 12, 2025 01:17 AM
சின்னசேலம் : சின்னசேலம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, சவுகார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாது சிங் மகன் பரத், 47; இவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் நேற்று பகல் 3:00 மணிக்கு சென்னையில் இருந்து கோயம்புத்துார் நோக்கி காரில் சென்றார்.
சின்னசேலம் அடுத்துள்ள தீர்த்தாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே பைக்கில் வந்த 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது கார் மோதியது.
இதில் பைக்கில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சின்னசேலம் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.