/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆன்லைனில் இறப்பு சான்றிதழ்; பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய தற்காலிக ஊழியர் கைது

ADDED : ஆக 21, 2024 04:38 AM
உளுந்துார்பேட்டை : இறப்பு சான்றிதழை ஆன்லைனில் பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய தற்காலிக பெண் ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எல்லப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் தங்கமணி,57; வியாபாரி. இவர், கடந்த 8 மாதங்களுக்கு முன் இறந்த தனது மகனின் இறப்பு சான்றிதழ் வேண்டி நேற்று முன்தினம், உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் சரஸ்வதி,45; என்பவரிடம் கேட்டார்.
அதற்கு அவர், இறப்பு சான்றிதழ் ஆன்லைனில் பதிவு செய்து உடனடியாக வேண்டும் என்றால் ரூ.1,500 கொடுத்தால் கிடைக்கும் என்றார். இதுகுறித்து தங்கமணி, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
அவர்களின் ஆலோசனைப்படி, நேற்று பகல் 1:45 மணிக்கு தாலுகா அலுவலகம் சென்ற தங்கமணி, அங்கு பணியில் இருந்த தற்காலிக ஊழியர் சரஸ்வதியிடம் அவர் கேட்ட லஞ்சப் பணம் ரூ.1,500யை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய சரஸ்வதியை, அங்கு மறைத்திருந்த டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.