/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா
ADDED : நவ 20, 2025 05:37 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் இன்னர்வீல் கிளப் சார்பில் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.3.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.
சங்கராபுரம் இன்னர்வீல் கிளப் தலைவர் இந்துமதி செல்வமணி தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் கலாவதி ஜனார்த்தனன், கமலாவதி செந்தில்குமார், பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் வேதநாயகம் வரவேற்றார்.
புதிதாக கட்டப்பட்ட கலையரங்க கட்டடத்தை இன்னர்வீல் கிளப் மாவட்ட ஆளுனர் டாக்டர் பத்மினி கபாலிமூர்த்தி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வணிகர் பேரவை மாவட்ட பொருப்பாளர் முத்துக்கருப்பன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்திவேல், பொது சேவை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் குசேலன் வாழ்த்துரை வழங்கினார்.
இன்னர்வீல் கிளப் பொருளாளர் கலைவாணி முனுசாமி நன்றி கூறினார்.

