/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சம்பா சாகுபடிக்கு கோமுகி அணை திறப்பு
/
சம்பா சாகுபடிக்கு கோமுகி அணை திறப்பு
ADDED : அக் 26, 2024 08:15 AM

கச்சிராயபாளையம் : கோமுகி அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை மூலம் 5,860 ஏக்கர், புதிய பாசன கால்வாய் மூலம் 5,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் முழு கொள்ளளவான 46 அடியில் (560 மில்லியன் கன அடி) தற்போது 44 அடி (489. 56 மில்லியன் கன அடி) நீர் நிரம்பியுள்ளது.
அணையில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு அணை நிரம்பாததால், தண்ணீர் திறப்பு தாமதமானது.
தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையில், அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, சம்பா சாகுபடிக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த், வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அருணகிரி முன்னிலை வகித்தனர்.
முதல் 15 நாட்களுக்கு அணையின் பழைய பாசனமான கோமுகி ஆற்றில் வினாடிக்கு 60 கன அடி, புதிய பாசன வாய்க்காலில் 50 கன அடி தண்ணீர் திறக்கப்படும். பின் அது முறையே வினாடிக்கு 120 மற்றும் 100 கன அடியாக உயர்த்தப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி சேர்மன் பன்னீர்செல்வம், தாசில்தார் மனோஜ் முனியன், ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணிமாறன், உதவி செயற்பொறியாளர்கள் மோகன், விஜயகுமரன், பிரபு, பிரசாந்த், மாதவன், பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.