/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனை

ADDED : மே 17, 2025 03:55 AM

கள்ளக்குறிச்சி: ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி கீர்த்தனா பொதுத்தேர்வில் 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பிடித்துள்ளார்.
அடுத்ததாக, மாணவர் விஸ்வநாத் 473 மதிப்பெண்களும், மாணவர் சர்வேஷ் 466 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பொருளியல், சுற்றுலாவியல் மற்றும் அழகியல் கலை பாடங்களில் தலா ஒரு மாணவர் வீதம், மொத்தம் 3 பேர் 'சென்டம்' பெற்றனர்.
மேலும், 450க்கு மேல் 7 பேரும், 400க்கு மேல் 27 மாணவ, மாணவியரும், மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளி தாளாளர் பாரத்குமார், மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி, கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.
அப்போது, பள்ளி செயலாளர் சாந்தி பாரத்குமார், பள்ளி முதல்வர் ஜாய்ஸ்ரெக்சி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.