/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெயிண்டர்ஸ், ஓவியர்கள் சங்க கூட்டம்
/
பெயிண்டர்ஸ், ஓவியர்கள் சங்க கூட்டம்
ADDED : ஜன 30, 2024 03:57 AM

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்ஸ் மற்றும் ஓவியர்கள் நலச்சங்க மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தன்யா மகாலில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் திருமலைவாசன், ராஜிவ்காந்தி, மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏழுமலை, துணைத் தலைவர் கணேசன், தகவல் தொடர்பு செயலாளர் ராம்பிரகாஷ் வரவேற்றனர்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., நிகழ்ச்சியை துவக்கி வைத்து உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
லோக் ஜன சக்தி மாநில பொதுச் செயலாளர் ஓவியர் ஆனந்த், மாவட்ட தலைவர் செந்தில்குமார், பொது செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சம்சுகனி, அய்யப்பன், பொன்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மாநில தலைமை சட்ட ஆலோசகர் மதியழகன் சட்ட விதிமுறைகள் குறித்து பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் கார்த்திக், இளைஞரணி அணி தலைவர் ஜோசப்ராஜன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.