தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பனை விதைகள் நடும் விழா

பனை விதைகள் நடும் விழா

பனை விதைகள் நடும் விழா


ADDED : அக் 18, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 04:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கலையநல்லுார் ஏரிக்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் தமிழ் கலை இலக்கிய சங்கம், தியாகதுருகம் ரோட்டரி சங்கம், கள்ளக்குறிச்சி மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு இணைந்து கண்ணதாசன் 45வது நினைவு நாளை முன்னிட்டு பீளமேடு பஞ்சாயத்து கலையநல்லுார் ஏரிக்கரையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா நடந்தது.

கண்ணதாசன் தமிழ் கலை இலக்கிய சங்க மற்றும் உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். துணை வேளாண் அலுவலர் சிவக்குமார் விழாவை ஒருங்கிணைத்தார்.

பீளமேடு ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஆனந்தராஜ், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் முத்துக்குமார், உலக திருக்குறள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்பத், மாநில துணை பொது செயலாளர் பழனிவேல், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் இதயம் கிருஷ்ணா ஆகியோர் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

ரோட்டரி சங்க செயலாளர் குணசீலன், பொருளாளர் ரஜினிகாந்த், உலக திருக்குறள் கூட்டமைப்பு துணைத் தலைவர்கள் வெங்கடாஜலபதி, செல்வம், குப்புசாமி, மாவட்ட செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாள் சண்முக பிச்சப்பிள்ளை, எல்.ஐ.சி., ஏழுமலை, செல்வராஜ், பெரியசாமி, தேவகி தங்கராசு, மாணிக்கம், ஆசிரியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us