/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ம.க., கொடிக்கம்பத்தை அகற்றியதால் பரபரப்பு
/
பா.ம.க., கொடிக்கம்பத்தை அகற்றியதால் பரபரப்பு
ADDED : பிப் 02, 2024 11:36 PM

திருக்கோவிலுார்- தேவனுார் கூட்ரோடு அருகே பா.ம.க., கொடிக்கம்பத்தை அகற்றியதை கண்டித்து பா.ம.க., வினர் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் தேவனுார் கூட்டுறவு சாலையில் பாலம் கட்டப்பட்டு, சாலை விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. இதன் காரணமாக சாலையோரம் இருந்த பா.ம.க., கொடிக்கம்பம் நேற்று இரவு அகற்றப்பட்டது.
இதனையறிந்த பா.ம.க., மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமையில் கட்சியினர் நேற்று காலை 10:00 மணிக்கு சம்பவ இடத்தில் கூடி சாலை மறியல் செய்ய முயன்றனர்.
கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம், அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாற்று இடத்தில் கொடிக்கம்பத்தை அமைத்து தருவதாக ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பா.ம.க., வினர் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

