/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு ஆண்கள் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
/
அரசு ஆண்கள் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
ADDED : அக் 25, 2024 07:05 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஆசிரியர் முகமது கவுஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் ராமானுஜம் அறக்கட்டளை செயலாளர் செந்தில் பிரகாஷ் காலாண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வரங்கி பேசினார்.
கூட்டத்தில் வரும் அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவர்கள் அயராது படித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை தேடி தர வேண்டும் என தலைமை ஆசிரியர் மாணவர்களையும், அதற்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.