/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதால் அவதி
/
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதால் அவதி
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதால் அவதி
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதால் அவதி
ADDED : ஏப் 14, 2025 11:39 PM
கள்ளக்குறிச்சி, ; சிறுவங்கூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும், இரு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம், தியாகதுருகம், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு இரு சக்கர வாகனங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ், கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.மருத்துவமனையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி உள்ள நிலையில், ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது.
எனவே, தாறுமாறாக நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.