/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பயணியர் நிழற்குடை; எம்.எல்.ஏ., திறப்பு
/
பயணியர் நிழற்குடை; எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : ஏப் 15, 2025 06:28 AM

கச்சிராயபாளையம்; மூலக்காடு கிராமத்தில் புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
கல்வராயன்மலையில் உள்ள வஞ்சிக்குழி ஊராட்சிக்குட்பட்ட மூலக்காடு கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில், உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நிழற்குடையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பி.டி.ஓ. ஜோசப் ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னத்தம்பி, ஊராட்சி தலைவர்கள் குப்புசாமி, சின்னக்கண்ணு, செல்வம், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ஆத்மா குழு தலைவர் வெங்கடேசன், உதவி பொறியாளர் அருண் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.