/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் நிலையத்தில் பணம் பறிக்கும் ஆசாமிகளால் பயணிகள் அச்சம்
/
பஸ் நிலையத்தில் பணம் பறிக்கும் ஆசாமிகளால் பயணிகள் அச்சம்
பஸ் நிலையத்தில் பணம் பறிக்கும் ஆசாமிகளால் பயணிகள் அச்சம்
பஸ் நிலையத்தில் பணம் பறிக்கும் ஆசாமிகளால் பயணிகள் அச்சம்
ADDED : நவ 26, 2025 08:01 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் பணம், மொபைல் போன் உள்ளிட்டவைகளை பறித்துச் செல்லும் ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதனையொட்டி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பஸ் ஏறிச் செல்கின்றனர். இதனால் எப்போது பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில், பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி பணம், மொபைல் போன் போன்றவற்றை பறித்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் வெளியூர் பயணிகள் அசதியில் பஸ் நிலையத்தில் துாங்குகின்றனர். அதேபோல் அளவுக்கு அதிகமான மதுபோதையில் அவ்வப்போது விழுந்து கிடக்கின்றனர்.
இதனை பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் ஆசாமிகள் சிலர் நோட்டமிட்டு துாக்க அசதி மற்றும் மதுபோதையில் இருப்பவர்களிடம் பணம், மொபைல் போன் உள்ளிட்டவைகளை அபகரித்து செல்கின்றனர்.
இதனைக் பொதுமக்கள் கண்டு கேட்டாலும் அவர்களையும் மிரட்டி செல்கின்ற னர்.
பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் அநாவசியமாக சுற்றி திரியும் மர்ம ஆசாமிகளால் பயணகளிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
எனவே போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு பணம் பறிக்கும் ஆசாமிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

