கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஓய்வூதியர் தின விழா நடந்தது.
கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கேசவராமானுஜம் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் துவக்க உரையாற்றினார். மாநில செயலாளர் மனோகரன் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய் வழங்க வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை காசில்லா திட்டமாக அனைத்து துறை ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.