/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் இல்லாததால் மக்கள் அவதி
/
அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் இல்லாததால் மக்கள் அவதி
அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் இல்லாததால் மக்கள் அவதி
அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர் இல்லாததால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 05, 2025 03:32 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு மருத்துவமனை, சித்த மருத்துவ பிரிவு மருந்தகத்தில், மருந்தாளுநர் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சங்கராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில், சித்த மருத்துவ பிரிவு இயங்கி வருகிறது. சங்கராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார 40க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை வருகின்றனர். இங்குள்ள சித்த மருத்துவ பிரிவு மருந்தகத்தில் பணியாற்றிய மருந்தாளுநர் 6 மாதத்திற்கு முன்பு மகப்பேறு விடுப்பில் சென்றார். அவருக்கு பதிலாக வேறு மருந்தாளுநர் நியமிக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே மருந்தாளுநர் வருவதால், அன்றைய தினம் மட்டுமே மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் மருந்து, மாத்திரைகளை வழங்கப்படுவதில்லை.
மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. எனவே, சங்கராபுரம் மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவுக்கு மருந்தாளுநர் நியமிக்கவும், துப்புரவு பணியாளர் பணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.