ADDED : நவ 18, 2026 05:03 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன் மாற்றுத்திறனாளி குடும்பத்தினரின் ரேஷன் கார்டுகளை ஏ.ஏ.ஒய்., வகை கார்டாக மாற்ற வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம் இன்று (நவ.,18) நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் வேலு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரமேஷ்பாபு கண்டன உரையாற்றினார். மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினர் வைத்துள்ள ரேஷன் அட்டைகளை அன்னயோஜனா அந்தோதயா திட்ட (ஏ.ஏ.ஒய்) வகை கார்டாக மாற்றி, மாதந்தோறும் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் அனைவரது வீட்டிற்கும் சென்று ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்ட பொருளாளர் மீனாட்சி, துணை தலைவர்கள் ஆறுமுகம், பத்மாவதி, துணை செயலாளர்கள் சுதா, கொளஞ்சி உட்பட பலர் பங்கேற்றனர்.
