/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்
/
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 29, 2025 11:29 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், ஆறுமுகம், கவுதமி முன்னிலை வகித்தனர். நிறுவனர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு பதில் பொருளாதார அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்களுக்கு இலவசம், சலுகைகள் வழங்குவதை அரசு கைவிட்டு அடிப்படை உரிமைகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், ஜெயபிரகாஷ், கந்தநாதன் குமார், பன்னீர்செல்வம், சதிஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். மாநில குழு உறுப்பினர் ராஜகோபால் நன்றி கூறினார்.