/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
/
முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : அக் 29, 2025 11:31 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, வள்ளி தெய்வானை பாலமுருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில், சூரசம்ஹாரம் விழா, கடந்த, 22ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து 5ம் நாள் விழாவாக சூரசம்ஹாரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கணபதி பூஜை, சுப்பிரமணிய ஹோமம் நடத்தி, வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் உற்சவமூர்த்திக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. வைபவத்தினை அம்பிகேஸ்வரன் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் ஏமப்பேர் விஸ்வநாதர், கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவில், இந்திலி பாலமுருகன், பெருவங்கூர் சாலை சங்கரலிங்க சித்தர் பீடம், கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர் கோவில்களில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தன.

