/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடாரம் சென்று 1000 ஆண்டு நிறைவு அரசு விழாவாக கொண்டாட மனு
/
கடாரம் சென்று 1000 ஆண்டு நிறைவு அரசு விழாவாக கொண்டாட மனு
கடாரம் சென்று 1000 ஆண்டு நிறைவு அரசு விழாவாக கொண்டாட மனு
கடாரம் சென்று 1000 ஆண்டு நிறைவு அரசு விழாவாக கொண்டாட மனு
ADDED : நவ 21, 2025 05:23 AM

கள்ளக்குறிச்சி: மாமன்னர் ராஜேந்திரசோழன் கடாரம் சென்று 1000 ஆண்டுகள் நிறைவடைந்ததை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என பா.ஜ., தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்திடம், பா.ஜ., தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் வெற்றிவேல்முருகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் தமிழரின் புகழினை பரப்பி சிறப்பான ஆட்சி செய்ததில் மாமன்னன் ராஜேந்திரசோழன் முக்கியத்துவம் பெற்றவர். 13 நாடுகளின் மன்னர்களை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். மேலும், மாமன்னன் ராஜராஜசோழன் கடந்த 1025ம் ஆண்டு மிகப்பெரிய கடற்படையுடன் கடாரம் சென்றார் என்பது வரலாறு. கடாரம் சென்று 1000 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.