/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி
/
அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி
ADDED : நவ 21, 2025 05:23 AM

கள்ளக்குறிச்சி: உலகங்காத்தான் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி நடந்தது.
தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் உலகங்காத்தான் கிராமத்தில் அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய அரசு நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட தொகுப்பினை கிராம மக்கள் பார்வையிட்டனர். மேலும், அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு நலத்திட்டங்களை பெற்று பயன்பெறுமாறு எடுத்துரைத்தனர்.

