/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சாலை பணியை நிறுத்தக்கோரி மனு
/
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சாலை பணியை நிறுத்தக்கோரி மனு
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சாலை பணியை நிறுத்தக்கோரி மனு
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சாலை பணியை நிறுத்தக்கோரி மனு
ADDED : ஜூலை 01, 2025 01:40 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்படும் சாலை பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சிவன் வேடமணிந்து மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி அகில பாரத இந்து மகா சபா கட்சியின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் செந்தில் சிவன் போல வேடமணிந்தும், கட்சி நிர்வாகிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
ஏமப்பேர் பகுதியில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க தனியார் நிறுவனங்கள் சார்பில் 5 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறி பிரவேசித்து சாலை அமைக்கப்படுகிறது.
எனவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.