/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு
/
அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு
ADDED : ஜூன் 04, 2025 09:17 PM
கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் அருகே அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சங்கராபுரம் அடுத்த, அரசம்பட்டு கிராமத்தில் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசம்பட்டு கிராமம், 4வது வார்டு பகுதி மக்களுக்கு சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். இது சம்பந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் பல மாதங்களாக மனு மீது, ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.