/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏரி தண்ணீரை வெளியேற்ற கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
ஏரி தண்ணீரை வெளியேற்ற கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஜூன் 21, 2025 03:47 AM

கள்ளக்குறிச்சி:தியாகதுருகம் அருகே தேர் திருவிழாவையொட்டி ஏரியில், 2 அடி தண்ணீரை வெளியேற்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே, பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
பல்லகச்சேரி ஏரியில் உள்ள பழமை வாய்ந்த சாமுண்டியம்மன், செல்லியம்மன் கோவிலில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்திருவிழா நடைபெறும்.
இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்து செல்வர். நடப்பாண்டு ஆக., மாதம் 8ம் தேதி திருவிழா தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறும். ஏரியில் அதிகளவு தண்ணீர் இருப்பதால் திருவிழா முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளது. அதனால் ஏரியில் இருந்து 2 அடி தண்ணீரை வெளியேற்ற அனுமதி வழங்க வேண்டும்.