/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போட்டோ - ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
போட்டோ - ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 01, 2026 06:51 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு (போட்டோ - ஜியோ) சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் புஷ்பராஜ், பல்வேறு சங்க நிர்வாகிகள் சந்திரசேகர், ஆண்டாள், பெரியசாமி, பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
கணேசன் துவக்க உரையாற்றினார். ஞானசுந்தர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு வழங்குதல், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி மற்றும் பகுதி நேர பணியாளர்களை பணிநிரந்தம் செய்து காலமுறை ஊதியம் வழங்குதல், அரசு துறைகளில் தனியார் மைய நியமனத்தை கைவிடுதல் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில் வரும் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போட்டோ - ஜியோ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

