நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த பழைய சிறுவங்கூர் நான்கு முனை சந்திப்பில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நேற்று நடந்தது.
இதில், தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட அரசின் திட்டங்கள் குறித்த விபரம், மாவட்டத்தில் அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி., பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள் ஆகியவை அடங்கிய புகைப்பட தொகுப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் புகைப்படங்களை பார்வையிட்டனர்.