/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பி.கே.எம்., ஜூவல்லரி 2ம் ஆண்டு விழா
/
பி.கே.எம்., ஜூவல்லரி 2ம் ஆண்டு விழா
ADDED : செப் 20, 2024 09:50 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் பி.கே.எம்., ஜூவல்லரி முதலாம் ஆண்டு நிறைவு மற்றும் 2ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, குலுக்கல் முறையில் 10 வாடிக்கையாளர்களுக்கு தங்கச் செயின் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 15, 16, 17, 18 தேதிகளில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது.
நேற்று முன்தினம் ஜூவல்லரி வளாகத்தில் குலுக்கல் நடந்தது. நிகழ்ச்சியில், நிர்வாகி செந்தில் வரவேற்றார். நிர்வாகிகள் ராமச்சந்திரன், அஸ்வின் பாலாஜி, சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட துணைச் சேர்மன் தங்கம் தலைமை தாங்கினார். விவசாயி ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குலுக்கலை துவக்கி வைத்தார்.
வாடிக்கையாளர்கள் முன்னிலையில், 10 அதிஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் நான்கு கிராம் தங்க செயின் பரிசாக வழங்கப்பட்டது. கடையில் விற்கப்படும் நகைகளின் தரம், அதன் வெளிப்படை தன்மை குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கக் காட்சி காண்பிக்கப்பட்டது. நிர்வாகி சீதாராமன் நன்றி கூறினார்.