/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : மார் 29, 2025 05:16 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் இயற்கை பயிர் சாகுபடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில், வேப்பூர் ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி மாணவர்கள் தங்கி, கிராமப்புற வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏமப்பேர் அரசு துவக்கப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் பள்ளி ஆசிரியர்கள் விஜயலட்சுமி, சாந்தகுமாரி, பத்மாவதி, மற்றும் வேளாண் கல்லுாரி மாணவர்கள் திருப்பதி, சஞ்ஜய்முருகன், சந்தோஷ், சாரதி, செந்தில்பாஸ்கர், சுதர்சன், தமிழ்வாணன், செல்வமணி கலந்து கொண்டனர்.