தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பயன்பாடின்றி வீணாகும் விளையாட்டு மைதானங்கள்

 பயன்பாடின்றி வீணாகும் விளையாட்டு மைதானங்கள்

 பயன்பாடின்றி வீணாகும் விளையாட்டு மைதானங்கள்


ADDED : நவ 20, 2025 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2025 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊராட்சிகள் தோறும் அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்கள் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் விளையாட்டு திடல் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி சில மாதங்களுக்கு முன் நடந்தது. ஊராட்சி தலைவர்கள் தங்களது பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான காலி இடத்தை தேர்வு செய்து, பி.டி.ஓ., அலுவலகத்தில் தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த இடத்தை சமன்படுத்தி, வாலிபால் மற்றும் கபடி மைதானத்தை அமைத்தனர்.

இதற்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ. 60 ஆயிரம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், அனைத்து கிராமங்களுக்கும் பேட், ஸ்டம்ப், கிளவுஸ், பால், வாலிபால் உட்பட பல்வேறு விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு கிராமங்களிலும் ஏராளமான விளையாட்டு அணிகள் இருப்பதால் அரசு சார்பில் வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் போதுமானதாக இல்லை. மேலும், விளையாட்டு மைதானம் முறையாக அமைக்கப்படவில்லை. பெயரளவில் மண் சமன்படுத்தி புகைப்படம் எடுத்து கொண்டனர். சில ஊராட்சிகளில் ஊருக்கு வெளியே மைதானம் இருப்பதால் இளைஞர்கள் அங்கு சென்று விளையாட ஆர்வம் செலுத்தவில்லை. இதனால் பல லட்சம் ஒதுக்கீடு செய்து ஊராட்சிகள் தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைத்தும் அதன் நோக்கம் நிறைவேறவில்லை. இந்த மைதானங்கள் பயன்பாடின்றி, அதற்காக அரசு செலவழித்த பணம் வீணாகி வருகிறது. எனவே, விளையாட்டு மைதானம் சரியான முறையில் அமைப்பதுடன், கூடுதல் உபகரண வசதிகள் ஏற்படுத்தி, இளைஞர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us