/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உறுதிமொழி ஏற்பு
ADDED : டிச 12, 2025 06:54 AM
கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மனித உரிமைகள் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த உறுதிமொழி ஏற்புக்கு, கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் அனந்தராமன் வரவேற்றார். கல்லுாரி டீன் அசோக் வாழ்த்துரை வழங்கினார். உதவி பேராசிரியர் ராஜேஸ்வரி உறுதிமொழி வாசித்தார்.
நாம் அனைவரும் சுதந்திரமாகவும், உரிமைகளில் சமமாகவும் பிறக்கின்றோம், வாழ்வு உரிமை, சட்டத்தின் முன் சம உரிமை, மக்களாட்சி உரிமை, கல்விக்கான உரிமை மற்றும் யாரும் அடிமை இல்லை என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
முன்னதாக மனித உரிமைகள் தினம் கொண்டாடுவதன் நோக்கம் குறித்து வெவ்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
வணிக மேலாண்மை துறைத்தலைவர் ராஜா நன்றி கூறினார்.

