/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையின் அவலம்: போதிய டாக்டர்கள் இல்லாமல் மக்கள் தவிப்பு
/
உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையின் அவலம்: போதிய டாக்டர்கள் இல்லாமல் மக்கள் தவிப்பு
உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையின் அவலம்: போதிய டாக்டர்கள் இல்லாமல் மக்கள் தவிப்பு
உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையின் அவலம்: போதிய டாக்டர்கள் இல்லாமல் மக்கள் தவிப்பு
ADDED : செப் 19, 2024 11:55 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் பல்வேறு உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தாலும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளுக்கு ஏற்ப டாக்டர்கள் எண்ணிக்கை அதிகரிக்காததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் தினசரி 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இதனால் மருத்துவமனையில் காலை நேரத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் சென்னை, சேலம், திருச்சி, மதுரை, உள்ளிட்ட மையப் பகுதியாக உளுந்துார்பேட்டை இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்பரம் அடுத்த முண்டியம்பாக்கம், புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேல் சிகிச்சைக்காக தொலை துாரம் செல்லும் நிலை உள்ளதால். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் உயிரிழப்புகள் நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
உளுந்துார்பேட்டை அரசு மருத்துமனையில் பல்வேறு உள்கட்டமைப்ப வசதிகளான பல்வேறு பிரிவுகளுக்காக கட்டட வசதி, மருத்துவ உபகரணங்கள். போதிய மருத்துவ வசதிகள் இருந்தாலும் சிகிச்சை அளிக்க கூடிய டாக்டர்கள், செவிலியர்கள் போதிய அளவில் இல்லாதது மருத்துவர்களிடையேயும், நோயாளிகளிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பவர்களை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால் மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளுக்கும், விபத்தில் சிக்கியவர்களுக்கும் முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் திணறுகின்றனர். மாநிலத்தில் மையப்பகுதியில் தென்மாவட்டங்களை இணைக்கு சந்திப்பாக உளுந்துார்பேட்டை நகரம் இருந்து வருவதால் உளுந்துார்பேட்டை முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது.
இப்படி முக்கியத்தும் உள்ள நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தற்போது உள்ள நிலையில் 16 டாக்டர் பணியிடங்களில் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் இருக்கும் டாக்டர்களில் மருத்துவ மேற்படிப்பு, விடுப்பு என ஒரிருவரும் சென்றுவிடுவதால் குறைந்த எண்ணிக்கையிலான டாக்டர்களை கொண்டு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் 14 செவிலியர் பணியிடங்களில் 5 பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
ஒரு சிலர் விடுப்பு எடுப்பதால் செவிலியர் பணிச்சுமை அதிகறிக்கிறது. மேலும் மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாக வைத்திருப்பதற்காக உள்ள துப்புரவு பணியாளர்கள் 16 பணியிடங்களில் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. 5 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே இருப்பதால் துப்புரவு பணி செய்வதிலும் துப்புரவு பணியாளர்கள் திணறுகின்றனர். விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க கட்டு கட்டும் ஊழியர் 4 பணியிடங்களில் 2 பேர் மட்டுமே உள்ளனர்.
இதனால் குறைந்த எண்ணிக்கையில் மருத்துவர்கள் இருப்பதால் தினசரி 1500 பேருக்கு சிகிச்சை அளிக்கும் சூழல் உள்ளதால் சிகிச்சை பெற நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களுக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதோடு பணியிடங்களை அதிகரிக்க மாவட்ட நிர்வாகமும் சுகாதார துறையும், தமிழக அரசும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கவலை அளிக்கிறது.
மேலும் குறைந்த எண்ணிக்கையிலான மருத்துவர்கள். செவிலியர்கள் இருப்பதால் அதிக பணிச்சுமை, ஏற்படும் என்பதால் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பணிபுரிய மருத்துவ ஊழியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே மக்களின் நலன் கருதி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் பணியிடங்களையும், காலியாக உள்ள பணியிடங்களுக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என மருத்துவ ஊழியர்களை உடனடியாக நியமித்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவமனையாக மாற்றியமைக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.