/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது! 17,683 மாணவர்கள் பங்கேற்பு
/
பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது! 17,683 மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது! 17,683 மாணவர்கள் பங்கேற்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கியது! 17,683 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : மார் 01, 2024 10:34 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 75 தேர்வு மையங்களில் நேற்று பிளஸ் 2 தேர்வு துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 77 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 10 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 5 சுயநிதி பள்ளிகள், 33 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 125 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது. பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான அரசு பொது தேர்வு நேற்று துவங்கி, வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.
பொது தேர்வுக்காக 75 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 8,422 மாணவர்கள், 9,261 மாணவிகள் என மொத்தம் 17,683 பேர் தேர்வு எழுத கல்வி துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு தேர்வு நடந்தது.
தேர்வு நடைபெறும் மையத்தினை கண்காணித்திட 5 பறக்கும் படை குழுக்கள், 102 நிலையான உறுப்பினர்கள், அறை கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் கட்டுப்பாளர்கள் மூலம் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசு பொது தேர்வு மையத்தினை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சி.இ.ஓ., முருகன், சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் கோபி, தலைமையாசிரியர் உடனிருந்தார்.
ஆய்வில், பிளஸ் 2 பொது தேர்வையொட்டி தேர்வு நடக்கும் மையங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, தேர்வு மைய வளாக துாய்மை போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

