/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் கல்லுாரிகளுக்கு களப்பயணம்
/
பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் கல்லுாரிகளுக்கு களப்பயணம்
பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் கல்லுாரிகளுக்கு களப்பயணம்
பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் கல்லுாரிகளுக்கு களப்பயணம்
ADDED : செப் 02, 2025 09:50 PM

கள்ளக்குறிச்சி; பிளஸ் 2 பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி ஆர்வத்தை ஏற்படுத்த கல்லுாரிக்கு களப்பயணம் அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்லுாரியில் சேர்வதற்கான ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் களப்பயணம் அழைத்து செல்வதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் உள்ள 71 அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 4,850 மாணவர்களையும், நாளை (4ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளுக்கும் களப்பயணம் அழைத்து செல்லவும், ஒவ்வொரு கல்லுாரியிலும் உள்ள விளையாட்டு அரங்கம், மைதானம், அறிவியல் ஆய்வகம், கணினி ஆய்வகம், நுாலகம், கல்லுாரியின் சிறப்புகள், கல்லுாரியில் பயில்வதால் கிடைக்கூடிய பல்வேறு சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும்.
கள பயணத்தின்போது, மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி, உணவு உள்ளிட்டவை சிறப்பாக வழங்கிட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் பள்ளி கல்வி துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.