/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சேலம் எம்.எல்.ஏ., வை கைது செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் பா.ம.க., வினர் மனு

ADDED : நவ 07, 2025 12:35 AM

கள்ளக்குறிச்சி: சேலம் எம்.எல்.ஏ.,வை கைது செய்யக்கோரி பா.ம.க., தலைவர் அன்புமணி தரப்பினர் மனு அளிக்க எஸ்.பி., அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ம.க., அன்புமணி தரப்பு நிர்வாகிகள் எஸ்.பி., மாதவனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
சேலம் தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்கள், வாழப்பாடி அடுத்த வடுகத்தாம்பட்டி பகுதியில் பா.ம.க., தலைவர் அன்புமணி தரப்பை சேர்ந்த நிர்வாகிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அன்புமணி தரப்பை சேர்ந்தவர்கள் மீது அவதுாறு பரப்பி வருகின்றனர்.
எனவே, கூலிப்படை வைத்து தாக்குதல் நடத்திய அருள் எம்.எல்.ஏ., வை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, பா.ம.க., மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன், கிழக்கு மாவட்ட செயலாளர் செழியன், மாநில மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் ராஜா, கிழக்கு மாவட்ட தலைவர் சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காசாம்பு பூமாலை, மாவட்ட பொருளாளர் பூங்கொடி மகேஸ்வரி, மாநில இளைஞரணி துணை செயலாளர் முத்துவேல், மாநில துணை தலைவர் மணிகண்டன், மாநில துணை செயலாளர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.