/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணி திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆய்வு

ADDED : நவ 07, 2025 12:40 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணியினை வாக்குப் பதிவு அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு வீடாக சென்று அதற்கான படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை மணம்பூண்டி, அரகண்டநல்லுாரில் திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர், சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் நேரில் ஆய்வு செய்தார்.
பணியை தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டும், விரைவாகவும் செய்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது கண்டாச்சிபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயலட்சுமி மற்றும் திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.