/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சொத்துப் பிரச்னையில் 7 பேர் மீது போலீசார் வழக்கு
/
சொத்துப் பிரச்னையில் 7 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஆக 02, 2025 07:33 AM
தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே சகோதரருக்குள் ஏற்பட்ட சொத்து பிரச்னையில் தாக்கி கொண்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தியாகதுருகம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன்கள் சோலையன், 65; ராமலிங்கம், 53; இவர்களுக்குள் தங்களின் பூர்வீக சொத்தை பிரித்துக் கொள்வதில் பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில் இவர்களுக்குள் கடந்த 31ம் தேதி தகராறு ஏற்பட்டு இருவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து சோலையன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் தியாகதுருகம் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன்படி சோலையன் தரப்பில் சிவபெருமான், 48; பூபதி, 21; லட்சுமி, 42; மீதும், ராமலிங்கம் தரப்பில் அளித்த புகாரின்பேரில் செல்வம், 27; மணி, 32; உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.