/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பணம் கேட்டு மிரட்டல்: போலீசார் வழக்கு
/
பணம் கேட்டு மிரட்டல்: போலீசார் வழக்கு
ADDED : டிச 04, 2024 10:31 PM
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே கூலித்தொழிலாளியின் கழுத்தில் கத்தி வைத்து பணம், நகை கேட்டு மிரட்டி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வரஞ்சரம் அடுத்த குடியநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் ரஹமதுல்லா,52; இவரது விளைநிலத்தில் ராமசாமி என்பவர் தங்கி, வேலை செய்து வருகிறார். கடந்த நவ., 30ம் தேதி இரவு 10.15 மணியளவில் விளை நில கொட்டகையில் ராமசாமி இருந்துள்ளார்.
அப்போது, முகமூடி அணிந்த மர்மநபர்கள் 4 பேர், ராமசாமியின் கழுத்தில் கத்தி வைத்து, பணம், நகை தருமாறு கேட்டுள்ளனர். தன்னிடம் எதுவும் இல்லை என தெரிவித்த ராமசாமியை தாக்கியதுடன், கொட்டகையில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமிராக்கள் மற்றும் மின்சாதன பொருட்களை உடைத்து, சேதப்படுத்தி விட்டு மர்மநபர்கள் சென்றுள்ளனர்.
இது குறித்து ரஹமதுல்லா அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.