/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதியவர் சடலம் போலீஸ் விசாரணை
/
முதியவர் சடலம் போலீஸ் விசாரணை
ADDED : மே 15, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே, ஆட்டுக்கொட்டகையில் துாக்கிட்டு முதியவர் சடலமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சிராயபாளையம் அடுத்த மட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம், 74; விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வந்ததால், தினமும் இரவு நேரங்களில் கொட்டகையில் உறங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு ஆட்டு கொட்டகைக்கு உறங்கச் சென்றார். நேற்று காலை 8:30 மணிக்கு,
புடவையில் தூக்கிட்டு ஆட்டு கொட்டகையில் சடலமாக கிடந்தார்.
கச்சிராயபாளையம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.