ADDED : நவ 07, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த மணக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மனைவி பிரியா,25; இவர் கடந்த 2 ம் தேதி 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

