
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் அன்னாபிஷேக நடந்தது.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டவனேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா தீபாரதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதேபோல் சங்கராபுரம் அடுத்த பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், சங்கராபுரம் சன்னதி தெரு சங்கரலிங்கேஸ்வரர் கோவில், மூக்கனுார் சிவன் கோவில்களில் அன்னாபிேஷக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

